வறட்சிக் காலநிலை – ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

Saturday, January 14th, 2017

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சிக்கால நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு அரசாங்கம் விசேட வேலைத் திட்டமொன்றை மேற்கொள்ளவிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

இது விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மகா நாட்டில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். மகா நாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருனாரட்ன பரணவிதாரன அமைச்சின் உயர் அதிகாரிகள் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலான்சூரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மேலும் தெரிவிக்கையில்:

வளிமண்டலவியல் திணைக்களத்தின்நிலையத்தின் எதிர்கூரலின் படி வறட்சியான காலநிலை அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது விடயம் தொடர்பில் ஜனாதிபதி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். வறட்சியான காலநிலையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரச உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். இந்த பிரச்சினையை ஆராய்வதற்கு விசேட அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்; தெரிவித்தார்

16272617531b29d9543fc0d938aabd30_XL

Related posts: