வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் திருமஞ்சத் திருவிழா விமரிசை!
Thursday, August 18th, 2016
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பத்தாம் நாள் திருமஞ்சத் திருவிழா நேற்றுப் புதன்கிழமை(17) மாலை மிக விமரிசையாக இடம்பெற்றது. விநாயகப் பெருமான், வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு விசேட அபிசேக ஆராதனைகள் என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து முத்துக் குமாரசுவாமி வள்ளி தெய்வயானை சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து பிற்பகல்-06 மணியளவில் வெளிவீதியில் திருமஞ்ச இரதத்தில் எம் பெருமான் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள்பாலித்தார்.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய திருமஞ்சத்தில் எம்பெருமான் எழுந்தருளிய காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.



Related posts:
கம்மன்பிலவின் எச்சரிக்கை!
டெங்குகாய்ச்சல் பரவும் வேகம் அதிகரிப்பு!
சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் எரிவாயுவை விநியோகம் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|
|


