வரலாற்றில் முதன்முறையாக நாட்டு நெல் ஒரு கிலோ 51ரூபா!

Thursday, January 19th, 2017

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாட்டு நெல்லின் விலை கிலோவொன்றுக்கு 51 ரூபாவாக உயர்ந்திருப்பதாக பொலன்னறுவை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் நாட்டு நெல்லை  51ரூபாவுக்கும், சாதாரண சம்பா நெல்லை 50ரூபாவுக்கும் கீரிச் சம்பா நெல்லை 56ரூபாவுக்கும் கொள்வனவு செய்த வருகின்றனர் எனவும் சம்பாவை விட நாடு விலை உயர்ந்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவே எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெரும் போகத்தின் பின்னர் நாடு நெல் 35ரூபாவாகவும், சம்பா நெல் 35ரூபாவாகவும், கீரிச் சம்பா நெல் 45ரூபாவாகவும் இருந்தன. அதன்பின் அவற்றின் விலை கிலோவொன்றுக்கு 3தொடக்கம் 4ரூபா வரை அதிகரித்த போது விவசாயிகள் தங்கள் இருப்பில் இருந்தவற்றை ஒரேடியாக விற்று விட்டதால் இன்று இந்த விலைகள் உச்சகட்டத்துக்குப் போயிருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

paddy

Related posts: