வட மாகாணத்தில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களுக்கு சந்தைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!

வட மாகாணத்தில் உற்பத்தியாகும் எமது மண்ணுக்கேயுரிய தரமான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய உற்பத்திப் பொருட்கள் போன்றவற்றிற்கு சந்தைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கவும் புலம்பெயர் மக்களின் தேவைகளை பூர்த்தியாக்கும் வகையில் ஏற்றுமதி செய்யவும், பொருத்தமான வசதிகளைப் பெற்றுக் கொடுக்க யாழ். வணிகர் கழகம் முன்வந்துள்ளது.
இவ்வாறான பொருட்களின் தேவைகள் பற்றிய கேள்வி கோரல்கள் யாழ். வணிகர் கழகத்திற்கு ஏற்கனவே கிடைத்துள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்த வசதியாக எமது மண்ணில் உள்ளுரில் உற்பத்தியாகும் தரமான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் பற்றி அனைத்து விபரங்களையும் உற்பத்தியாளர்கள் விரைவாக அனுப்பி வைக்க முடியும்.
“யாழ் வணிகர் கழகம்” , 165, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியுடனோ அல்லது jaffnachamberofcommerce@gmail.com என்ற ஈமெயில் முகவரியுடனோ உற்பத்தியாளர்கள் தொடர்பு கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு 021 222 8593 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ் வணிகர் கழகத் தலைவர் இ. ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.
Related posts:
குடாநாட்டில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு!
மீள் மதிப்பீட்டிற்காக விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நிறைவு - பரீட்சைகள் திணைக்களம்!
சவால்களை தாங்கிக்கொள்ளும் இயலுமை நிறைந்த தேசமாக ஆசிர்வாதத்துடன் உயிர்த்தெழ ஆரம்பித்திருக்கிறோம் - வா...
|
|