வடமராட்சி படகு தொழிற்சாலை மூலம் பாரிய கடற்கலங்கள் அமைப்பு!

வடமராட்சி கிழக்கில் அமைக்கப்பட்ட படகு தொழிற்சாலை மூலம் பெரிய அளவிலான கடற் கலங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த படகு உற்பத்தி நிறுவனம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதன் ஊடாக ஒரு படகும் பரீட்சார்த்தமாக தயாரிக்கப்பட்டது. தற்போது ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்கும் பொருட்டு 41அடி நீளத்திற்கு மேலாக நவீன வசதிகளுடன்கூடிய படகுகளை அமைப்பதற்கே கடற்றாழில் நீரியல்வள அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
மீனவர்களுக்கு மானிய விலையில் பெரிய அளவிலான கடற்கலங்களையும் பெற்றுக்கொடுப்பதங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வடமரட்சி கிழக்கில் அமைக்கப்பட்ட படகு உற்பத்தி தொழிற்சாலை ஊடாக பெரிய அளவிலான கடற்கலங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பெரிய அளவிலான கடற்கலங்கள் விரைவில் படகு உற்பத்தி தொழிற்சாலை ஊடாக அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை: மூவருக்கு 99 ஆயிரம் ரூபா அபராதம்!
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை உருவாகிவிட்டது - இலங்கை மருத்துவ சங்கம் தெரிவிப்பு!
இன்றுமுதல் 51 ஆயிரம் பட்டதாரிகள் நிரந்தர அரச ஊழியர்களாக நியமனம்!
|
|