வடக்கு விவசாயிகள் அன்னாசியில் ஆர்வம்!
Thursday, October 13th, 2016
வடக்கு மாகாண விவசாயிகள் அன்னாசிச் செய்கையில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த முறை காலபோகத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் அன்னாசிச் செய்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாறு விவசாயத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
அன்னாசி செய்கைகளுக்காக இரு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மொத்தமாக 2லட்சம் அன்னாசி உறுஞ்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாதம் அன்னாசி செய்கைக்கான நடுகை காலமாகும். அன்னாசி பழச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அன்னாசி உறுஞ்சிகளை தற்போது நடுகை செய்ய ஆரம்பித்துள்ளனர். யாழ்.குடாநாட்டில் ஆரம்பத்தில் தென்மாராட்சிப் பிரதேசத்திலேயே அன்னாசிச் செய்கை பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டது. பரீட்சார்த்த அன்னாசிச் செய்கை வெற்றியளித்தது. வடக்கு விவசாயிகள் தற்போது புதிய பயிர்ச்செய்கைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் பலர் கூடுதலாக அன்னாசிச் செய்கையில் ஈடுபடுவதற்கும் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்காக ஊக்கமளிப்பதற்காக 1லட்சத்து 50 ஆயிரம் அன்னாசி உறிஞ்கிகள் வழங்கப்பட்டுள்ளன. அன்னாசி உறிஞ்சிகளை விவசாயிகள் தற்போது நடுகை செய்கின்றனர். யாழ்.குடாநாட்டில் உள்ள விவசாயிகளுக்கு 53 ஆயிரம் அன்னாசி உறிஞ்கிகள் வழங்கப்பட்டுள்ளன. அன்னாசிச் செய்கைகளை விவசாயிகள் மிகவும் சிறப்பாகப் பராமரித்துச் செய்கை செய்வதன் மூலம் அதிக விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியும். – என்று விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts:
|
|
|


