வடக்கு மாகாணத்தில் மூன்று பாடசாலைகளுக்கு அதிபர் ஆசிரியர் விடுதி நிர்மாணிப்பு!
 Wednesday, August 24th, 2016
        
                    Wednesday, August 24th, 2016
            
வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை மற்றும் விளையாட்டுத் துறை இளைஞர் விவகார அமைச்சின் செயற்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் மூன்று பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர் விடுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
யாழ். மாவட்டத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி தேசிய பாடசாலையிலும் 80 இலட்சம் ரூபா செலவில் அதிபர் விடுதி நிர்மாணிக்கப்படவுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் அல் அசார் தேசிய பாடசாலையில் 13 மில்லியன் ரூபா செலவில் ஆசிரியர் விடுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.
ஏற்கனவே, வடமாகாணக் கல்வியமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 37 பாடசாலைகளில் அதிபர் விடுதி அமைக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
Related posts:
"காஸ்" விலை உயருமா?
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் இணையத்தளம் பிரதமரின் தலைமையில் வெளியீடு!
நாட்டின் சிலப்பகுதிகளில் பலத்த மழை பெய்யும் - வானிலை அவதான நிலையம் அறிவிப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        