வடக்கின் வீதி ஒழுக்கத்தை பேணுவதற்கு பொலிஸார் புதிய பொறிமுறை – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவிப்பு!
Saturday, May 11th, 2024
வடமாகாணத்தில் வீதி ஒழுக்கத்தை பேணுவதற்கு பொலிஸார் பல புதிய செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஓட்டுநர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அடையாளம் காணப்பட்ட இடங்களில் புதிய போக்குவரத்து அறிகுறி பலகைகளை நிறுவுதல், வாகன நிறுத்தங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் முறைப்படுத்துதல்,போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற பல நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம் வடமாகாணத்தை அதிகபட்சமாக வீதி ஒழுக்கத்தை பேணும் மாகாணமாக மாற்றுவதே பொலிஸாரின் நோக்கமாகும் என வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புகையிரத சேவை கால அட்டவணைக்கு மேலதிகமாக மற்றுமொரு கால அட்டவணை!
காய்கறிகள் மற்றும் மீன்களின் விலை உயர்வு - உற்பத்தி பகுதிகளிலிருந்து வழங்கல் குறைவாக உள்ளமையே காரணம்...
தாதியர்களின் கற்கை நெறி தரமுயர்த்தப்படும் - உறுதி அளித்தார் பிரதமர் மகிந்த ராஜபக்ச!
|
|
|


