வடக்கின் சமரின் போது காலாவதியான குளிர்பானம் !

Saturday, March 11th, 2017

யாழ்ப்பாணம் மத்தியக்கல்லூரி மைதானத்தில் ‘வடக்­கின் போர்’ கிரிக்­கெட் போட்டி நடைபெற்ற போது காலாவதியான குளிர் பானங்களை விற்பனை செய்தவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது தனி­யார் நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான சோடா வகை­கள்­ மற்றும் யூஸ் வகை­கள் விற்­பனை செய்­யப்­பட்­டன.

இதில், ஒன்று வாங்­கி­னால் ஒன்று இல­வ­சம் என்ற வகை­யில் 100 ரூபா­வுக்கு அங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக தாகத்தில் அங்கு வந்த மாணவர்கள் காலா­வ­தித் திக­தி­யைப் பார்க்­கா­மல் அதனை பெற்று அருந்தியுள்ளனர்.

ஆனால், அதனை பெற்றுக்கொண்ட ஒரு மாண­வர் மட்டும் காலா­வ­தித் திக­தியை பார்­வை­யிட்ட பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்­பவ இடத்­துக்கு வருகைதந்த பொலிஸார் விற்பனையினை தடை செய்ததுடன், பொதுச் ­சுகாதா­ரப் பிரி­வி­னா் காலா­வ­தி­யான சோடா வகை மற்­றும் யூஸ் வகை­களைக் கைப்­பற்­றி­யுள்ளனர்.மேலும் குறித்த விற்பனை நிறுவனத்தின் யாழ்ப்­பாண முக­வ­ருக்கு எதி­ரா­க­வும் வழக்­கு தாக்கல் செய்யப்ட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: