வசாவிளான் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

மீள்குடியேற்றத்துக்காக அண்மையில் அனுமதிக்கப்பட்ட வசாவிளான் தெற்குப் பலாலிப் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து மூன்று ஜொனி ரக மிதிவெடிகள் அச்சுவேலிப் பொலிஸாரினால் நேற்று முன்தினம் (29) மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி பகுதியில் அமைந்திருந்த பாழடைந்த கிணரொன்றைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது கிணற்றில் புதைந்திருந்த வெடிக்கக் கூடிய நிலையிலிருந்த மூன்று மிதிவெடிகள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் அருகிலுள்ள இராணுவக் காவலரணுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சமபவ இடத்திற்கு வருகை தந்த அச்சுவேலிப் பொலிஸாரும், இராணுவத்தினரும் வெடி பொருட்களை மீட்டெடுத்துச் சென்றனர்.
Related posts:
பருத்தித்துறை நகர சபையின் திண்மக் கழிவகற்றலுக்கு ஒத்துழைக்கக் கோரிக்கை!
அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச காப்புறுதி!
குறைந்த வட்டியின் கீழ் வீட்டை கொள்வனவு செய்வதற்காக கடன் - நகர அபிவிருத்தி அதிகார சபை!
|
|