வகுப்புத் தடையை நீக்குங்கள்- பல்கலையில் ஆர்ப்பாட்டம்!

Monday, August 15th, 2016

மாணவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்ககோரி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வாயிற் கதவின் முன்னால் கூடிய பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் முகாமைத்துவபீடங்களைச் சேர்ந்த 27 மாணவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்; வகுப்புத் தடைக்கு உட்பபடுத்தப்பட்டுள்ளார்கள்.

எனினும், இந்த வகுப்புத் தடை நியாயமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் பல தடவைகள் கலந்துரையாடியுள்ள போதிலும் வகுப்புத் தடையை நீக்க நிர்வாகம் முன்வரவில்லையென மாணவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி சீரான நிர்வாகத்திற்கு இடைஞ்சலாகவும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளைப் பின்பற்றி நடக்கும் ஏனைய மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார் மற்றும்

கல்விசாரா ஊழியர்களுக்கும் இடைஞ்சலாக இருக்காத நிலைமைக்கு பல்கலைக்கழகத்தை வழிநடாத்த வேண்டும் என்பதால் தாம் குறித்த சில மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்ட்டுள்ளோம்.

எனினும் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட மாணவர்கள் மீதான வகுப்புத் தடை அடுத்த 2 மாத காலத்தில் முடிவடையவுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள...
வடக்கு மாகாணத்தில் பல அதிகாரிகளுக்கு இடமாற்றம் - பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் அறிவிப்பு!
எதிர்வரும் ஆண்டில் அரசாங்க சேவையில் புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது - திரைசேரியின் செயலா...

பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தலைமையகம் நிர...
திருகோணமலை எண்ணெய் குதங்களை நிர்வகிப்பதற்கு புதிய நிறுவனம் ஸ்தாபிப்பு - எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்...
மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்ட சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் - ...