லசந்தவின் கொலை தொடர்பில் மேலும் 12 பேரிடம் வாக்குமூலம்!

சண்டேலீடர் செய்தித்தாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் மேலும் 12 புலனாய்வு அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறவேண்டியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உரிய தரப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் இன்னும் குறித்த 12 பேரையும் விசாரணை செய்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்றும் சீஐடி தெரிவித்துள்ளது
குறித்த கொலை தொடர்பில் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மற்றுமொரு புலனாய்வு அதிகாரி தாமே கொலை செய்ததாக பொறுப்பேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அண்மைக்காலத்தில் இடம்பெற்றது
இதன் பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலனாய்வு அதிகாரியான பிரேமநந்த உதலகம பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.லசந்த விக்கிரமதுங்க, 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|