புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையிலி அமைச்சரவை உப குழு!

Thursday, March 3rd, 2022

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ஷ, அலி சப்ரி ஆகியோர் இந்த அமைச்சரவை உப குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த அமைச்சரவை உபகுழுவின் தலைவராக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்களில் தகுதியானவர்களை தெரிவு செய்தல், உயர்ந்த பயனுள்ள திட்டங்களை அடையாளம் காணுதல், திட்டங்களை செயற்படுத்துவதற்காக அமுலிலுள்ள சட்டங்கள் மற்றும் தடைகளை அடையாளங் கண்டு நீக்குதல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களினூடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புடன் இணைப்பதற்கான வசதிகளை மேம்படுத்துதல் என்பன குறித்து இந்த உப குழு கவனம் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: