யாழ். மாவட்டத்தில் மூவாயிரம் மழை நீர் தாங்கிகள்!

Thursday, October 27th, 2016

 

யாழ் மாவட்டத்தில் மூவாயிரம் மழை நீர் தாங்கிகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் இதற்கு இந்திய அரசாங்கம் 30 கோடி ரூபா நிதியை வழங்க உள்ளதாகவும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் பாதுகாப்பான குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள யாழ்ப்பாண மக்களுக்கு சுத்தமான நீரை வழங்கும் நோக்கத்துடன் இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், இலங்கையில் உள்ள இந்தியா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் சமர்ப்பித்த ஆலோசனைக்கு அமைய இந்த நிதியுதவி கிடைக்க உள்ளதாகவும் இதற்கான உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி விசேட ஒழுங்கு விதிகள் திருத்த சட்டமூலம் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட இதற்கான ஆவணத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இதற்காக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தேசிய கொள்கையொன்றை வகுப்பதற்கு ,தன் மூலம் வசதி ஏற்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி முகவர் நிறுவனமொன்று அமைக்கப்படும். கிராமங்களை நவீனமயப்படுத்தல், மற்றும் பிரதேச அபிவிருத்திக்காக கொள்கைகளை வகுத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கும் இதன் மூலம் வசதிகள் ஏற்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கோல்டன் கீ நிலையான வைப்பீட்டாளர்களுக்கு நட்டஈடுகளை செலுத்துவதற்கான மூன்றாம் கட்ட கொடுப்பனவிற்கு 4 கோடி51 இலட்சம் ரூபா நிதியை வழங்குவதற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது என்று செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கயந்த கருணாதிலக் குறிப்பிட்டார்.

கோல்டன் கீ கடன் அட்டை நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் திறைசேரி பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனையும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் அனுமதி மூலமான நடவடிக்கையின் கீழ் இந்த நிறுவனத்தின் வைப்பீட்டாளர்களுக்கு முதல் கட்டத்தின் கீழ் 54 கோடி 13 இலட்சம் ரூபாவையும் 2ம் கட்டத்தின் கீழ் 394கோடி 56 இலட்சம் ரூபாவும் செலுத்தப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

12-8-2016 11.8.23 1

Related posts: