யாழ் மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவும் வழங்க நடவடிக்கை – மாவட்ட செயலகம் தெரிவிப்பு!
Saturday, August 21st, 2021
தற்போது நாடளாவிய ரீதியாக அமுலில் உள்ள பொது முடக்க காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள அரச உதவி எதுவும் பெறாத வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு 2 ஆயிரம் ரூபா நிவாரண உதவி விரைவாக வழங்கப்படுவதாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் போதிய யளவு கையிருப்பில் உள்ளதாகவும் பொதுமக்கள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை என யாழ் மாவட்ட செயலகம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்புவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது
எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தரவின்படி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் போதியளவு கையிருப்பில் உள்ளதாகவும் பொதுமக்கள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சமடைய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|
|


