யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட வெற்றுக் காணிகளிலுள்ள பற்றைகளை வெட்டி அகற்றுமாறு அறிவுறுத்தல்!
Thursday, August 4th, 2016
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட வெற்றுக் காணிகளிலுள்ள படர்ந்துள்ள பற்றைகள், செடிகளை வெட்டி அழிக்குமாறு அறிவுறுத்தல் பிரசுரங்கள் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த அறிவுறுத்தல்கள் ஒட்டப்பட்டு 14 நாட்களுக்குள் காணிகள் துப்பரவு செய்யப்பட வேண்டும். காணி உரிமையாளர்கள் குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் காணிகளைத் துப்பரவு செய்யப்படாவிடில் மாநகர சபையால் காணிகள் துப்பரவு செய்யப்படும். துப்பரவு செய்யப்படுவதற்கான செலவு காணி உரிமையாளர்களிடம் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாரிய பண மோசடி: லைகா மொபைல் நிறுவனத்தின் 19 பேர் கைது!
நல்லூர் தேர், தீர்த்த உற்சவ நாட்களில் நேர்த்திக்கடன் நிறைவேற்ற விரும்பும் அடியவர்களின் முக்கிய கவனத்...
வடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மை - விரைவில் தீர்வு காணப்படும் என்கிறார் அமைச்சர் டலஸ் அழகப...
|
|
|


