யாழ். மட்டுவிலில் 31 வயது இளைஞர் தற்கொலை

யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இளைஞரொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை(04) காலை-06:30 மணியளவில் குறித்த இளைஞர் வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டமைக்கான சரியான காரணம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை.
இதேயிடத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் கஜதீபன்( வயது -31) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
15 முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி - இவ்வாரம் ஜனாதிபதி ஆலோசனை வழங்குவார் என இராணுவத் தள...
பயங்கரவாதிகளின் பாதுகாப்பு உறைவிடமாக கனடா மாறியுள்ளது- இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி தெரிவிப்...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானம் - துறைமுகங்கள்,...
|
|