யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வதுருடம் வெளிநோயாளர் பிரிவில் மட்டும் 3 இலட்சம் பேருக்கு சிகிச்சை !
Monday, January 2nd, 2017
யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் கடந்த ஆண்டு 3லட்சத்து 60 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுப் பொறுப்பதிகாரி மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு 3லட்சத்து 60 ஆயிரம் பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெற்றனர். 1லட்சத்து 30ஆயிரம் நோயாளர்கள் வைத்தியசாலை விடுதியில் தங்கிச் சிகிச்சைப் பெற்றனர் 2லட்சத்து 30ஆயிரம் பேர் நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 80ஆயிரம் பேர் சிறுவர்கள். சாதாரண காய்ச்சல், சுவாசத்தொற்று, தோல் தொற்று, முதுகுநோவு, நாரி உழைவு, முழங்கால் உழைவு, சீறுநீரகத் தொற்று மற்றும் நாய் கடிக்கு இலக்கானவர்களே இவ்வாறு சிகிச்சைப் பெற்றுள்ளனர். என்று மருத்துவர் சி.ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

Related posts:
திண்மக் கழிவுகளை வீதிகளில் கொட்டுவோர் மீது நடவடிக்கை!
இளைஞன் வெட்டிக் கொலை: பொலிஸார் தீவிர விசாரணை - முல்லைத்தீவில் சம்பவம்!
இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தலையீடு செய்யப்போவதில்லை - இலங்கைக்கான சீன தூதரகம் அறிவிப்பு!
|
|
|


