யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வாகனம் விபத்து – மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரில் ஒருவர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் ஒருவர் உயிரிழந்தார்.
இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து பூநகரி முக்கொம்பனில் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் 3பேர் பயணித்துள்ளனர். அவர்களில் பூநகரி வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன் (வயது-52) என்பவரே உயிரிழந்தார்.
அவர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்று ஆரம்ப விசாரணயில் தெரிவிக்கப்பட்டது பணிப்பாளருடன் சென்று கொண்டிருந்த போதே அவரது வாகனம் விபத்துக்குள்ளானது. உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயப்பட்டவர்களில் ஒருவருக் கால் முறிந்துள்ளது. அவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். பணிப்பாளரின் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டார். விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
|
|