யாழ்.பல்கலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம்: மேலும் மூன்று தமிழ் மாணவர்களிடம் விசாரணை!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று தமிழ் மாணவர்களிடம் விசாரணை செய்வதற்காகப் பொலிஸாரால் தகவல் கோரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிங்கள மாணவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே குறித்த மாணவர்கள் விசாரணை செய்யப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.
மேற்படி மாணவன் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏற்கனவே யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கோப்பாய்ப் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மாணவர் ஒன்றியத் தலைவர் அண்மையில் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிப் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
5 ஆயிரம் புசல் விதை நெல்லை கொள்வனவு செய்யத் திட்டம்!
வாகனங்களின் இறுதி இலக்கத்தின்படி இன்றுமுதல் எரிபொருள் விநியோகம் - மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு...
பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி தீர்வு பெற்று தர முயல்வேன் - வடக்கு மாகாண ஆளுநர் பி எச் எம் சாள்ஸ் தெ...
|
|