யாழ். நல்லூரில் வாள்வெட்டு; நான்கு பிள்ளைகளின் தந்தை படுகாயம் 

Friday, April 14th, 2017

யாழ். நல்லூர் சட்டநாதர் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் நான்கு பிள்ளைகளின் தந்தையாரொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

நேற்றுமுன்தினம் புதன்கிழமை(12) நல்லூர் சட்டநாதர் வீதியில் குறித்த குடும்பஸ்தர் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார்ச் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதலை நடாத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். எனினும், எத்தனை பேர் எங்கிருந்து வந்து வாள்வெட்டுத் தாக்குதலை நடாத்தினர் என்ற விபரம் எதுவும் தெரியவரவில்லை.

குறித்த வாள்வெட்டுத் தாக்குதலில் உரும்பிராய்ப் பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் சோதிநாதன்(வயது-48) என்பவரே படுகாயமடைந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:

வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பமொன்றுக்கு வடபிராந்திய சத்திய சாயி நிறுவனத்தால் வீடு
சம்பந்தன் தனி நாட்டுக் கோரிக்கையை கைவிட்டுள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது - வாசுதேவ நாணயக்கா...
யாழ்ப்பாணத்தில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன...

ஆலயங்களில் மிருக பலியிடுதலுக்கு  யாழ். மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவ...
தடுப்பூசி செலுத்திக்கொள்ள இளைஞர்கள் தயக்கம் - அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எ...
சிறுபோக சிறப்பான அறுவடை கிடைக்குமாயின் உணவு நெருக்கடி ஏற்படாது - விவசாய அமைச்சு தெரிவிப்பு!