யாழ். நகர அபிவிருத்தித் திட்டத்தில் விரைவில் வீதிகள் சீரமைப்பு !

Monday, October 17th, 2016

யாழ். நகரின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழான, பருத்தித்துறை கொடிகாமம், யாழ்ப்பாணம் – பொன்னாலை ஆகிய வீதிகளின் சீரமைப்பு நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன என்று அறிய முடிந்தது. இரண்டு வீதிகளின் சீரமைப்பு பணிகளின் போது சுவீகரிக்கப்படும் மக்களின் காணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

12.5 கிலோ மீற்றர் நீளமான பருத்தித்துறை கொடிகாமம் வீதி ஆயிரத்து 300 மில்லியன் ரூபா செலவில் சீரமைக்கப்படவுள்ளது. இந்த வீதி அகலிப்புச் செய்யப்பட்டு காப்பெற் வீதியாக அமைக்கப்படவுள்ளது. அகலிப்பு பணியின்போது சுவீகரிக்கப்படவுள்ள காணிகள் அளவீடு செய்யப்பட்டு அதனை மதிப்பீடு செய்யவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 12.3 கிலோ மீற்றர் நீளமான யாழ்ப்பாணம் – பொன்னாலை கரையோர வீதி ஆயிரத்து 600 மில்லியன் ரூபா செலவில் அகலிக்கப்பட்டு காப்பெற் வீதியாகச் சீரமைக்கப்படவுள்ளது. வீதிச் சீரமைப்புக்கான சகல தரப்புக்களுடனான கலந்துரையாடலும், மாவட்டச் செயலகத்தினால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் அளவீட்டுப் பணிகள் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டது. யாழ்.நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நகரிலுள்ள 44 குளங்கள் தொடர்பிலான மதிப்பீடு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

119427930

Related posts: