யாழ். நகரப் பகுதியில் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

யாழ். நகரப் பகுதியில் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபரொருவரை எதிர்வரும்-18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று வியாழக்கிழமை(06) உத்தரவிட்டுள்ளார்.
யாழ்- கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்தொன்றின் மூலம் கடத்தப்படுவதாக யாழ்ப்பாணம் புலனாய்வுப் பொலிஸாருக்குத் தகவலொன்று கிடைத்துள்ளது. குறித்த தகவலையடுத்து சந்தேகநபர் நேற்று முன்தினம் புதன்கிழமை கைதாகியிருந்தார். இவ்வாறு கைதான சந்தேகநபரை நேற்று யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தியுள்ளனர். இதன் போதே சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சட்டமா திணைக்களத்தில் வெற்றிடங்கள்!
ஆபத்தை நெருங்கியுள்ளோம் – வைத்தியசாலைகளின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இடமில்லை - இராஜாங்க அமைச்சர் ச...
பேர்ல் கப்பல் தீப்பற்றிய விவகாரம் தொடர்பில் ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
|
|