யாழ். நகரப் பகுதியிலுள்ள பழக் கடைகளில் சுகாதாரப் பிரிவினரின் கண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன!

யாழ். நகரப் பகுதியிலுள்ள பழக் கடைகள் மீது சுகாதாரப் பிரிவினரின் கண்காணிப்புக்கள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது றம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழ வகைகளின் சீசன் ஆரம்பமாகியுள்ளதையடுத்தே அழுகிய றம்புட்டான் பழங்கள்,மற்றும் விற்பனைக்குப் பொருத்தமில்லாத பழக் கடைகளை யாழ்.மாநகர சுகாதாரப் பிரிவினர் கண்காணித்துச் சோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
பாவனைக்குதவாத பழ விற்பனையில் ஈடுபடும் வியாபார உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ். மாநகர சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
Related posts:
யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்கச் சங்கிலி !
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசெட அறிவிப்பு!
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவை மையமாகக் கொண்டு வடக்கில் பாரிய திட்டம் - அமைச்சர் ரமேஷ் பத்திரன ...
|
|