யாழ். குடாநாட்டில் வாழைச்செய்கை பாதிப்பு!
Tuesday, December 20th, 2016
யாழ்.குடாநாட்டில் கடந்த மழையினால் வாழைச் செய்கையாளர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயல் தாக்கத்தினால் குறைந்தது 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளதுடன் அழிந்துள்ளதாக விவசாய திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கூடுதலான வாழைகள் குழைகளுடன் விழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட வாழைகளை தோட்டங்களில் இருந்து அகற்றி நிலங்களை சீர் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாழை அழிவு காரணமாக வாழைப்பழங்களின் விலை அதிகரித்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் இந்த வாழைப்பழத்தின் விலை மேலும் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts:
நாளாந்தம் கொரோனா தரவுகளில் முரண்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி இன்று ஆரபம்!
நவம்பர் மாதம் 15,ஆம் திகதி முதல் புதிய வாகன இலக்கத் தகடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை!
|
|
|


