யாழ் குடாநாட்டில் ஓய்வூதியக் கொடுப்பனவு பெறுவோருக்கு இராணுவத்தினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடு – யாழ் மாவட்ட செயலகம் அறிவிப்பு!
Wednesday, June 9th, 2021
யாழ் மாவட்டத்தில் ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு இராணுவத்தினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
நாளையதினம் ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோர் தமக்குரிய கொடுப்பனவினை வங்கிகளில் பெறவுள்ள நிலையில் தற்போதுள்ள பயணத்தடையின் காரணமாக ஓய்வூதியக் கொடுப்பனவை பெறுவோர் தமது கொடுப்பனவினை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் பிரியந்த பெரேராவின் ஏற்பாட்டில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் இராணுவத்தினரால் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் யாழ் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோரில் வாகன வசதி தேவைப்படுவோர் தமது கிராம சேவகருடன் தொடர்புகொண்டு பிரதேச செயலாளர் ஊடாக தமக்கென ஒதுக்கப்பட்ட வாகனங்களில் பயணித்து தமக்கான ஓய்வூதிய கொடுப்பனவினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள கொரோனா இடர் நிலையினை கருத்திற்கொண்டு முதியோருக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் முகமாகவும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாகவும் இராணுவத்தினரால் இந்த போக்குவரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


