யாழ்.குடாநாட்டிலுள்ள மீனவர்களின் படகுகளுக்கு விசேட ஸ்ரிக்கர்கள் ஒட்டும் பணி ஆரம்பம்!

Friday, September 2nd, 2016

யாழ். குடாநாட்டிலுள்ள மீனவர்களின் படகுகளுக்கு விசேட ஸ்ரிக்கர்கள் ஒட்டும் பணியை யாழ். மாவட்டக் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது. குறித்த ஸ்ரிக்கர்கள் ஒட்டும் பணிகள் இன்று முதலாம் திகதி ஆரம்பமாகியுயுள்ளது. இன்று முதல் ஏழாம் திகதி வரை ஸ்ரிக்கர் ஓட்டும் பணிகள் ஒரு வாரத்திற்குத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

ஏற்கனவே, மாவட்டக் கடற்தொழில் திணைக்களத்தில் படகுகளைப் பதிவு  செய்த, பதிவு செய்யாத படகுகளுக்கும் இந்த ஸ்ரிக்கர்கள் ஒட்டப்படும். படகுகளைப் பதிவு செய்யாத படகு உரிமையாளர்கள் இம்மாத இறுதிக்குள் படகுகளைப் பதிவு செய்ய வேண்டுமென நீரியல் வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

images

Related posts:

சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு அறிமுகம் - ,மோட்டார் வாகன போக்குவரத்து த...
பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை பிரிவிற்கு புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W.டி சொய்சா ...
பிரமிட் என்பது வர்த்தகம் அல்ல –மிகப்பெரும் மோசடி - நிதி இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் ...