யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் இன்று மின்தடை
Wednesday, October 4th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை(04) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்ப்பாணத்தின் காரைநகர்ச் சி வன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம், வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, ஆலடி, மருதபுரம், வியாவில், கருங்காலி ஆகிய பகுதிகளிலும்,
மேலும் காலை- 09 மணி முதல் மாலை-05 மணி வரை ஓமந்தை வீட்டுத் திட்டம், ஓமந்தை மீன்பிடித் தொழிற்சாலை , ஓமந்தை AMP, தாண்டிக்குளத்திலிருந்து புளியங்குளம் வரை, ICT கல்லூரி, Union Alliance Ltd, ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் முடக்கம்!
மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் - சுகாதார அமைச்சு!
அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை - முன்னோடி வேலைத்...
|
|
|


