யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வர் விடுதலை!
Thursday, May 11th, 2017
வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை( 10) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.பி பெரேராவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வருடா வருடம் வெசாக், புத்தாண்டு போன்ற விசேட தினங்களில் ஜனாதிபதியின் பரிந்துரையின் அடிப்படையில் சிறுகுற்றம் புரிந்து நீதிமன்றங்களில் தண்டப்பணம் செலுத்த முடியாமல் தடுத்து வைக்கப்படும் கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழமை. வெசாக் தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் யாழ்.சிறைச்சாலையில் தண்டப்பணம் செலுத்த முடியாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மதிப்பீடு செய்யும் நடவடிக்கை விரைவில் - அமைச்சர் ரவூப் ஹக்கீம்!
இலங்கை - சீன மத்திய வங்கிகளுக்கிடையேயான 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி பரிமாற்றத்தை ஆராயுமாறு சீன...
கோட்டா கோ கம தாக்குதல் – முன்னாள் பிரதமர் மஹிந்த உள்ளிட்ட 11 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம்...
|
|
|


