யாழில் விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனம் மடக்கிப் பிடிப்பு!

Friday, May 11th, 2018

யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் தொடர் விபத்துக்களை எற்படுத்திவிட்டு தப்பியோடிய சிறியரக வாகனம் ஒன்று பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்வியங்காடு, நல்லூரடி, பரமேஸ்வராச்சந்தி ஆகிய பகுதிகளில் விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய வடி ரக வாகனமே மக்களால் இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கோவில் வீதி பகுதிக@டாகப் பயணித்த வேளையில் பருத்தித்துறை வீதியில் ஓர் மோட்டார் சைக்கிளை மோதிய நிலையில் நிறுத்தாமல் சென்றுள்ளது.

இதனையடுத்து சில இளைஞர்கள் குறித்த வாகனத்தை உந்துருளியில் விரட்டியுள்ளனர். இதன்போது குறித்த வாகன சாரதி வாகனத்தை நிறுத்தாது வேகமாகச் சென்று திருநெல்வேலி சிவன் – அம்மன் வீதியூடாகப் பயணித்து பலாலி வீதியை அடைந்துள்ளார்.

இதன்போது பலாலி வீதியில் உந்துருளியில் பயணித்த ஒருவரை மோதிவிட்டு தப்பியோட முயன்ற சமயம் உந்துருளியைச் செலுத்தி வந்தவர் வாகனத்தை மடக்கிப் பிடிக்க முயன்றுள்ளார். இதனால் வாகனத்தின் சாரதி வாகனத்தைக் கைவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. குறித்த வாகனத்தைச் சோதனையிட்ட பொலிஸார் வாகனத்தில் மரம் இருப்பதனால் அனுமதியற்ற மரமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வாகனத்தைக் கைப்பற்றி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts: