யாழில் வாள்வெட்டுக் குழுக்களைத் தேடிப் பொலிஸார் வலைவிரிப்பு!

யாழில் வாள் வெட்டுக் குழுக்களைத் தேடிப் பொலிஸார் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்.குடாநாட்டில் அண்மைக் காலமாக வாள்வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் குறித்த குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பொலிஸ், விசேட குழுக்கள் என்பன களமிறக்கப்பட்ட போதும் பலனளிக்கவில்லை. எனினும், ஒரு சில குழுக்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர். வாள்வெட்டுக் குழுக்களுடன் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் அவர்களைத் தேடி வலைவிரித்துள்ளனர்.
சந்தேகநபர்களைத் தேடி பொலிஸார் மேற்கொண்டு வரும் ரோந்து நடவடிக்கைக்கு விசேட அதிரடிப்படையினரும் தமது ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர்.
Related posts:
எமது அரசியல்வாதிகள் பிடல் கஸ்ரோவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் -ஜனதிபதி!
தெற்கில் பதற்றத்தை ஏற்படுத்திய பொருள் எரிகல்லாம்?
ஜூலை 15 முதல் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கப்படும் - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|