யாழில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம்!

யாழ்.மாவட்ட செயலகத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென்மராட்சிப் பகுதிகளில் இருந்து நகர்ப்புறங்களிற்குள் நுழைந்த குரங்குகள் மாவட்டச் செயலகத்தின் கட்டட உட்பகுதிகளிற்குள் மறைந்து வாழ்ந்துதற்போது பெருகி வருவதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.
ஆரம்பத்தில் 5 குரங்குகள் காணப்பட்ட நிலையில் தற்போது பத்தாக அதிகரித்துள்ளது. அது மட்டும் இன்றி குரங்குகள் காலை மாலை வேளைகளில் மாவட்டச் செயலக வளாகத்தில்இருந்து தொல்லை கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சிறுவன் சடலமாக மீட்பு!
நெற்செய்கை அழிவால் விவசாயிகள் பாதிப்பு!
தொழில்கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
|
|