யாழில் கறுப்பு கண்ணாடியின் பின்னிருந்து ஆசிரியைகளை துன்புறுத்தும் கல்விப்புல கறுப்பாடு யார்? – இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி?

Thursday, December 1st, 2016

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வலயக்கல்வி அலுவலகமொன்றில் கறுப்புக் கண்ணாடி அறைக்குள்ளிருக்கும் அதிகாரியொருவரால் பல ஆசிரியைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் அதிகாரி யார்? என இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வலயக்கல்வி அலுவலகமொன்றில் கறுப்புக்கண்ணாடி அறைக்குள்ளிருக்கும் அதிகாரியொருவரால் பல ஆசிரியைகள் பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாக அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் மத்திய கல்வி அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம்; விடுத்துள்ள குறிப்பிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 5 வலங்களுக்குள் கறுப்பு கண்ணாடியின் பின் ஒளிந்திருந்து செயற்படும் அந்த கேவலமான வலயக்கல்வி அதிகாரி யார்? அந்த அதிகாரியை வடக்கு மாகாணக் கல்வியமைச்சு உடனடியாகக் கண்டறியப்பட வேண்டும். பாதிக்கப்படும் ஆசிரியைகள் தமது குடும்ப, சமூக நிலைகளால் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு செயற்படும் குறித்த அதிகாரி எவ்வித தயவும் இன்றி தண்டிக்கப்படவேண்டும். வடமாகாணத்தின் கல்விப் புலத்தினை அச்சுறுத்தித் தனது பாலியல் இச்சைக்கு அடிபணியவைக்கும் அந்த அதிகாரக் களங்கம் கல்விப்புலத்திலிருந்து அகற்றப்படவேண்டும். இதற்கு உடனடியாக நீதியான விசாரணைகளை நடத்தி வடமாகாணக் கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ceylonteachersunion

Related posts: