யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் மீது கல்வீச்சு!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது நேற்று மாலை கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பளைப்பகுதியில் வைத்து தனியார் பஸ்ஸில் பயணித்த நபர் ஒருவர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக பளை பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பவத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்பட வில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
திருக்கேதீஸ்வரத்துக்கு வருகைதர வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதியில்லை -மன்னார் அரசாங்க அதிபர்அறிவிப்ப...
சீனி வரி மோசடி தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் - இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை!
ஆயுதக்குழுவின் முக்கிய உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் அதிரடி கைது!
|
|