மோட்டார் சைக்கிள்களுக்கு தண்டம் பொருத்தமற்றது – மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம்!
Saturday, November 26th, 2016
அதிகவேகம், இடது பக்கத்தால் முந்த முற்படுதல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு 25000ரூபா தண்டப்பணம் அறவிடும் யோசனையை மீள் பரிசீலனைக்குட்படுத்துமாறு அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம் நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச தரத்துக்கு ஏற்ப வேகக்கணிப்பு கருவிகள் இல்லாத நிலையில் இந்த தண்டப்பணத் தீர்மானம் மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்துவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த தண்டப்பணத்தின் மூலம் குறைந்த வருமானம் உடையவர்களை தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகும். வாகனங்களின் தராதரம் பார்த்து தண்டனைகளை நடைமுறைப்படுத்துமாறும் அச்சங்கம் அனுப்பியுள்ள கடிதம் மூலம் கேட்டுள்ளது.

Related posts:
டெங்கு நோயை ஒழிக்கும் நாடளாவியரீதியல் மூன்று மாதகால செயற்றிட்டம் ஆரம்பம்.
காலநிலையில் திடீர் மாற்றம்!
பதிவுக்காக 125 புதிய அரசியல் கட்சிகள் - தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|
|


