மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து 04 வயது குழந்தை பலி!
Monday, August 1st, 2016
மட்டக்களப்பு களுதாவளையில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில், நான்கு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
களுவாஞ்சிகுடியை சேர்ந்த சுரேஸ் தட்சயன் என்ற 04 வயது குழந்தையே இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டு இருக்கும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. களுவாஞ்சிகுடியில் இருந்து களுதாவளையை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, திடீரென துவிச்சக்கர வண்டியொன்று குறுக்கே பாய்ந்துள்ளது.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்த எத்தணித்த வேளை சைக்கிளில் இருந்த குழந்தை கீழே தவறிவிழுந்துள்ளது.
இதன்பின்னர், களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Related posts:
|
|
|


