மோசடி செய்த உத்தியோகத்தர் ஒருவர் இடமாற்றம்!
Saturday, April 15th, 2017
சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து பெருந்தொகை நிதியினை மோசடி செய்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மிகவும் பின் தங்கிய பகுதியொன்றிலுள்ள சமுர்த்தி பயனாளிகளிடம் மோசடி செய்தமைக்காகவே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை கிளிநாச்சியில் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் உள்ள சமுர்த்தி பயனாளிகளிடம் இவ்வாறு நிதிமோசடிகளில் ஈடுபட்ட நபர் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


