மைதான பாவனைக்கு அதிக வாடகை அறவீடு: துரையப்பா விளையாட்டு மைதானம் தொடர்பில் ஆர்வலர்கள் அதிர்ப்தி!

Saturday, January 28th, 2017

துரையப்பா விளையாட்டு மைதானம் பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டாலும் அது விளையாட்டு வீரர்களுக்கு முழுமையாக பயன்படுவதில்லை என யாழ் மாவடட விளையாட்டு ஆர்வலர்கள்  கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

யாழ் துரையப்பா விளையாட்டு மைதானம் கடந்த ஆட்சிக் காலத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது பெரு முயற்சி காரணமாக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கடந்த வருடம் ஜனவரி 18ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்பட்டது.

ஆயினும் அவ் மைதானம் முழுமையாக யாழ். மாநகர சபைக்கு கையளிக்கப்படவில்லை. எனினும் மாநகர சபை அவ் மைதானத்துக்கு ஒருநாள் வாடகையாக 50,000 ரூபாவை வசூலிக்கிறது. இப் பணத்தினை மாநகர சபை எதுவிதமான விளையாட்டு சம்பந்தப்பட்ட விடயங்களுக்கும் வழங்குவதில்லை எனவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

67col144743531_5176701_26012017_AFF_CMY

Related posts: