மேலும் 511 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா பரவலை அடுத்து விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அந்தவகையில் இன்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 511 பேர் நாடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 140 பேர் டுபாயிலிருந்தும், 137 பேர் கட்டாரிலிருந்தும் நாடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு நாடு திரும்பிய அனைத்து பயணிகளுக்கும் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 531 பேர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதர் கைது!
இலங்கை - தென்னாபிரிக்க கூட்டு மன்றத்தின் அடுத்த கூட்டம் நவம்பரில்!
ஜனாதிபதி ரணில் அடித்தாடுகின்றார் - அவரை ஆட்டமிழக்க வைக்கவே பலர் முற்படுகின்றனர் - அமைச்சர் ஹரின் பெர...
|
|