மூன்றாவது குழந்தைக்கு வழங்கப்படும் கொடுப்பனவு ரத்து!

Friday, June 24th, 2016

பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களது மூன்றாம் குழந்தைக்கு வழங்கப்படும் ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

இந்தக் கொடுப்பனவு வழங்குவதற்காக மூன்றாண்டுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2011, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளுக்கு மட்டுமே இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தை முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சுவார்த்தை நடத்தி தேவை என்றால் இந்த திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. படைவீரர்களின் மூன்றாம் குழந்தைக்கு கொடுப்பனவு ஏன் வழங்கப்படுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த போது ருவான் விஜேவர்தன மேற்கண்ட பதிலைத் தெரிவித்திருந்தார்.

 

Related posts:


அதிக பணிச்சுமை - தாதியர்களுக்கு பாரிய அசௌகரியம் - அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் சுட்டிக்காட்டு!
தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மீளாய்வு!
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமச...