முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2 ஆம் கட்ட விடுமுறையில் மாற்றம்!

Friday, August 18th, 2017

ஹஜ் பெருநாளை முன்னிட்டு, முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணைக்கான 2 ஆம் கட்ட விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

முன்னர் இரண்டாம் தவணைக்காக அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை 2 ஆம் கட்ட விடுமுறை வழங்கப்படவிருந்தது எனினும், ஹஜ் பெருநாளை முன்னிட்டு, இன்று முதல் வழங்கப்படவிருந்த விடுமுறை இரத்துச் செய்யப்பட்டு, எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதிவரை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது

இந்த நிலையில், முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts: