முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்!
Sunday, October 30th, 2016
வன்னி உட்பட வடமாகாணத்தில் மீள் குடியமர்த்தப்படும் முஸ்லிம்களுக்கு வீடமைப்புத் திட்டங்களில் வீடுகளை வழங்கும் போது அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாதென்று அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமுடனான சந்திப்பின் போது அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இந்த உறுதிமொழியை வழங்கினார். அரசியல் காரணங்களுக்கு அப்பால் உரிய முறையில் வீடமைப்புத் திட்டங்களில் தகுதி வாய்ந்தவர்கள் உள்வாங்கப்பட வேண்டுமென்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன் போது சுட்டிக்காட்டினார்.
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சியில் நிகழ்ந்த அநீதிகளும் பாரபட்சங்களும் வடமாகாண முஸ்லிம்களுக்கு தொடர்ந்தும் இடம்பெற அனுமதிக்கப் போவதில்லையென்றும் அமைச்சர் சுவாமிநாதன் கூறினார்.

Related posts:
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
பாதீடு நிறைவேற்றப்பட்டால் அரச ஊழியர்களின் ஊதியங்கள் அதிகரிக்கும் - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்...
வேலணை பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு மற்றும் தீவுப் பகுதிக்கான விவாகப் பதிவாளர் குணசிங்கம் துசாந்தன்...
|
|
|


