முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்!

வன்னி உட்பட வடமாகாணத்தில் மீள் குடியமர்த்தப்படும் முஸ்லிம்களுக்கு வீடமைப்புத் திட்டங்களில் வீடுகளை வழங்கும் போது அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாதென்று அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமுடனான சந்திப்பின் போது அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இந்த உறுதிமொழியை வழங்கினார். அரசியல் காரணங்களுக்கு அப்பால் உரிய முறையில் வீடமைப்புத் திட்டங்களில் தகுதி வாய்ந்தவர்கள் உள்வாங்கப்பட வேண்டுமென்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன் போது சுட்டிக்காட்டினார்.
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சியில் நிகழ்ந்த அநீதிகளும் பாரபட்சங்களும் வடமாகாண முஸ்லிம்களுக்கு தொடர்ந்தும் இடம்பெற அனுமதிக்கப் போவதில்லையென்றும் அமைச்சர் சுவாமிநாதன் கூறினார்.
Related posts:
விபத்தில் முதியவர் காயம்!
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை இரத்து செய்து வெளியானது வர்த்தமானி !
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று - மாவட்டத்தின் பல்வேறு துறைசார் பிரச்சினைகள் மற...
|
|