முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ்.போதனாவைத்திய சாலையில் நேற்றுச் சிறப்புச் சிகிச்சை!

அனைத்துலக மருத்துவ சுகாதார நலச்சங்கத்தின் அனுசரணையுடன் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 3ஆவது சிறப்பு மருத்துவ முகாம் நேற்றுக்காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பிரிவில் நடைபெற்றது.
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டதால் இடுப்பு மற்றும் நெஞ்சுப் பகுதிக்குக் கீழ் செயலிழந்தவர்கள் ஒரு பகுதியினர் மருத்துவ முகாமில் சிகிச்சைப் பெற்றனர். போராலும், விபத்துக்களினாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது அன்றாட தேவைகளுக்குரிய பொருள்கள் அடங்கிய பொதிகளும் வழங்கப்பட்டன. இதற்கான அனுசரனையை மருத்துவ சுகாதார நலச்சங்கம் வழங்கியது. முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு குருதி மற்றும் சிறுநீரக பரிசோதனைகளும் சிகிச்சையும் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு துறைசார் மருத்துவ நிபுணர்களது ஆலோசனைக்காக மேலதிக பரிசோதனைகளுக்கான அறிவுறுத்தல்கள்களும் வழங்கப்பட்டன. யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் த.சத்தியமூர்த்தியின் தலமையில் நடைபெற்றது.
Related posts:
|
|