முல்லைத்தீவில் பட்டாசு வெடித்து வீடொன்று முற்றாக எரிந்து நாசம்!

Sunday, October 30th, 2016

முல்லைத்தீவு – கைவேலிப்பகுதியில் தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு கொழுத்தப்பட்ட பட்டாசு வெடித்தில் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது எனினும் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது

முல்லைத்தீவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கொழுத்தி மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில் முல்லைத்தீவு –கைவேலிப்பகுதியில் நேற்று காலை 10.45 அளவில் வீடொன்றில் விழுந்த பட்டாசால் அந்த வீடு முற்றாக எரிந்துள்ளது.

தீயை  கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், வீட்டிலிருந்து எந்தவொரு பொருட்களையும்  மீட்கமுடியாது அனைத்தும் தீக்கு இறையாகியுள்ளன. யுத்தம் காரணமாக பேரழிவை சந்தித்த முல்லைத்தீவு மக்கள், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மீள்குடியேறி சுயமாக தொழில்களில் ஈடுபட்டு முன்னேறிவரும் நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றமை அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலைக்கு செல்லும் உதயப்பிரகாஸ் ஜெகதாயினியின் இரண்டு பிள்ளைகளும், தமது பாடசாலை உபகரணங்கள் முழுவதும் எரிந்துள்ளதால் பெரும் கவலையடைந்துள்ளனர்.

கடந்த  மூன்று மாதங்களாக  தனது கணவர்  பிரிந்து வாழ்வதால்  பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வாழும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உதயப்பிரகாஸ் ஜெகதாயினி தெரிவித்துள்ளதுடன், அடுத்து தனது இரண்டு பிள்ளைகளுடன் தான் என்ன செய்யப்போகின்றேன் என்றும் தெரியாதுள்ளதாக அச்சம் வெளியிட்டுள்ளார்.

c1-670x377

Related posts:


வடமாகாண கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரிய ஆலோசகர் வெற்றிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கை!
சட்டத்தை மீறுபவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை தொடரும் - சர்வதேசத்திடம் அதிபர் ரணில் விக்ரமசிங்க த...
தொல்பொருள் வரலாற்று சின்னங்களாக ஏழு சிவாலயங்கள் அடையாளம் - வரலாற்றை ஆராய்ந்து பாதுகாக்கவும் அரசு நடவ...