முல்லைத்தீவில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை முல்லைத்தீவு மாவட்டத்தில் என்.வி.கியூ. தரத்திரலான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளதாக அதன் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், இருச்சக்கர மற்றும் முச்சக்கரவண்டி திருத்துநர், வீட்டு மின்னிணைப்பாளர், தையல், வெதுப்புநர், அழகுக்கலையும் சிகை அலங்காரமும், அலுமினியம் பொருத்துநர், கணினி வன்பொருள் திருத்துநர் ஆகிய கற்கை நெறிகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தக்கற்கை நெறிகள் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், பாலிநகர் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய தொழில்பயிற்சி நிலையங்களில் நடைபெற இருக்கின்றன. இந்தக்கற்கை நெறிகளை கற்க விரும்புபவர்கள் தங்கள் பதிவுகளை அலுவலக நேரத்தில் மாவட்ட அலவலகத்தில் பதிவு செய்ய முடியும். எதிர்வரும் ஜனவரி மாதம் அரம்பமாகவுள்ளது. என்றார்.
Related posts:
|
|