முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் தெரிவிப்பு!

Tuesday, May 14th, 2024

நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய கல்வி அமைச்சும், சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளன.

இதேவேளை இலங்கை வரலாற்றில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது குறித்த யோசனை முன்வைக்கப்படுகின்றமை இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நேர்மையான அரச அதிகாரி எவரும் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் – ப...
சேவையை நாடிவரும் மக்களுக்கு வீண் சிரமங்களையும் அலைச்சல்களையும் ஏற்படுத்தாதீர்கள் - அதிகாரிகளிடம் யாழ...
உரப்பற்றாக்குறைக்கு அரச அதிகாரிகளின் தவறே காரணம் - விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றச்சாட்டு...