முதலில் நாம் வாழ வேண்டும், பின்னர் வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து சிந்திக்கலாம் – கிடைக்கின்ற தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி வலியுறுத்து!
Friday, September 3rd, 2021
பொதுமக்கள் அனைவரும் இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், வீடுகளை விட்டு வெளியேறும்போது முக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை தேர்வு செய்தி தடுப்பூசி செலுத்துவதற்கு செல்லாமல் அருகில் உள்ள தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டார்.
மேலும் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாமல் சிலர் காத்திருப்பதாகவும் முதலில் நாம் வாழ வேண்டும், பின்னர் வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து சிந்திக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வைத்தியர்களின் வேலை நிறுத்தம்: வைத்தியசாலைகள் முடக்கம்!
பெலியத்தை – காங்கேசன்துறை இடையே தினசரி புகையிரத சேவை!
நாடாளுமன்றம் நடைபெறும் தினங்களில் 9 மணி முதல் மாலை 5 மணி வரை அமைச்சர்கள் கட்டாயம் நாடாளுமன்றத்தில் இ...
|
|
|


