முகக்கவசம் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை!
Wednesday, May 5th, 2021
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலில் குறித்த நடவடிக்கை இடத்பெற்றது.
யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார், யாழ். மாநகர சபையின் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, யாழ். பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் விழிப்புணர்வை மேற்கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், தனியார் பேருந்துத் தரிப்பிடம், முச்சக்கரவண்டித் தரிப்பிடம் உள்ளிட்ட இடங்களில் இவ்வாறு கொரோனா விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, முகக்கவசம் அணியாதவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐந்து தடயவியல் கணக்காய்வுகளும் பூரணப்படாது - சபாநாயகர் கரு ஜயசூரிய!
மதம் அல்லது இன ரீதியாக அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்படாது - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
இலங்கைக்கு ஆதரவான பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விரைவில் சந்திப்பு - ந...
|
|
|


