மீள்குடியேற்ற செயலணியில் வடக்கின் முதலமைச்சர் இல்லை !

Thursday, August 11th, 2016

மீள்குடியேற்றம் தொடர்பான விசேட செயலணி வட மாகாண சபையின் ஆலோசனையை பெற்றுக்கொண்டே செயற்படும் அதேவேளை, அமைச்சரவை தீர்மானத்திற்கிணங்க அமைக்கப்பட்டுள்ள இச்செயலணியில் வட மாகாண முதலமைச்சர் இணைத்துக் கொள்ளப்படமாட்டார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுப் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்..

நாடாளுமன்றத்தில் நேற்று வன்னி மாவட்ட எம். பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் இது தொடர்பில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதமர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று(10) பிரதமரின் பதிலைப் பெற்றுக் கொள்வதற்கான கேள்வி நேரத்தின் போது வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பியான சார்ள்ஸ் நி்ர்மலநாதன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார்.

Related posts:


நாட்டின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை - சுற்றுலாத்துறை அமைச்சர...
அடுத்த மூன்று நாட்களுக்குள் எரிபொருளுக்கு வரிசையில் நிற்கும் நிலை முற்றுப்பெறும் - மின்சக்தி மற்றும்...
சுகாதார அமைப்புக்குள் சுமார் 2,000 மருந்தாளுநர்களுக்கு வெற்றிடம் - அரச மருந்தாளுநர்கள் சங்கத்தின் தல...